தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

விருதுநகரில் விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய வண்டி பாதை மற்றும் தனியார் நிறுவனம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-27 04:59 GMT

விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாக முன்பாக தமிழ் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் மற்றும் மீசலூர் கிராம பகுதிகளில் விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய வண்டிப்பாதை மற்றும் நீர்நிலை ஓடைகளை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது என்றும் அதனை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத தொடர்ந்து நேற்று விவசாயிகள் 40க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இதே இடத்தில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய தமிழ் விவசாய சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி, விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் மற்றும் மீசலூர் கிராமப் பகுதிகளில் விலை நிலங்களுக்கு செல்லக்கூடிய வண்டி பாதைகள் மற்றும் நீர்நிலை ஓடைகளை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. அதனை அகற்ற பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அவர்களது விளை நிலங்களுக்கு சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை இருக்காத பட்சத்தில் தொடர்ந்து இதே இடத்தில் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News