மலையடிவாரத்திலிருந்து வனத்துக்குள் யானைகளை விரட்டும் பணி
கடையநல்லூர் மலையடிவாரத்திலிருந்து வனத்துக்குள் யானைகளை விரட்டும் பணி நடைபெற்றது.
Update: 2024-06-14 09:56 GMT
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வனச் சரகத்துக்குள்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல், தென்னை, வாழை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனத்துக்குள்ளிருந்து உணவு, தண்ணீருக்காக வெளியே வரும் யானைகள் இப்பயிா்கள், மரங்களை சேதப்படுத்துவது தொடா்ந்து நிகழ்கிறது.
இதனால், பாதிக்கப்படு விவசாயிகள் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டுமாறு வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். அதையடுத்து, கடையநல்லூா் வனச் சரகா் சுரேஷ் தலைமையில் வனவா்கள் அம்பலவாணன், முருகேசன், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனக் காவலா்கள் உள்ளிட்டோா் மலையடிவாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, யானைகள் இருப்பது தெரியவந்தால் அவற்றை பல்வேறு வழிகளில் வனத்துக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.