தலைகீழாக தொங்கியவாறு ஓவியம் வரைந்த ஆசிரியர்

சிவனார் தாங்கலில் தலைகீழாக தொங்கியவாறு முதல்வர் ஸ்டாலினின் ஓவியம் வரைந்து ஆசிரியர் ஒருவர் அசத்தினார்.

Update: 2024-02-15 03:39 GMT

சிவனார் தாங்கலில் தலைகீழாக தொங்கியவாறு முதல்வர் ஸ்டாலினின் ஓவியம் வரைந்து ஆசிரியர் ஒருவர் அசத்தினார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் மாணவர்களுக்கு காலை உணவு தந்த தமிழக முதலமைச்சர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டு" முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள், அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது, நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், சிலருடைய குடும்ப சூழலும் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவினை முறையாக சாப்பிடுவதில்லை என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மாணவ, மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் ஊட்டச்சத்து உயர்த்துதல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் "மரத்தில் தலைக்கீழாக தொங்கிக்கொண்டு" முதல்வர் ஸ்டாலின் படத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்தார்.

இதைப்பற்றி ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில்:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள் முதல் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது, சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு மக்களிடையே, மட்டுமின்றி பிற மாநில மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, மாணவ குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தமிழக முதல்வர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பகுதிநேர ஓவிய ஆசிரியராகிய நான் மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்தேன் என கூறினார்.

Tags:    

Similar News