தங்கத்தால் விஜயகாந்த் உருவத்தை வரைந்த ஆசிரியர்
மணலூர்பேட்டையை சேர்ந்த ஓவிய ஆசிரியர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஓவியத்தை தங்க காசை கொண்டு வரைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் உடல் நலிவுற்று இருக்கும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் பழைய விஜயகாந்த் ஆக வர வேண்டி, விஜயகாந்த் அவர்கள் தங்கம் குணம் உள்ளதால் தங்கம் என்பதை குறிக்கும் வகையில் "தங்கத்தாலேயே" ( தங்க காசு ) விஜயகாந்த் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் முன்னிலையில் இருக்கும்போது, புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த்.
ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்பட்டார், தமிழ் திரை உலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் அவர்கள் டிசார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தார், தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ஓவிய ஆசிரியர் செல்வம் கேப்டன் அவர்கள் மீண்டும் பழைய விஜயகாந்த் ஆக வரவேண்டி "தங்க மனசுக்காரர் விஜயகாந்த்" அவர்களின் உருவத்தை வரைய தங்கம் என்பது குறிக்கும் வகையில் சுமார் இரண்டு பவுன் மதிப்புள்ள 'தங்க காசை' நீர் வண்ணத்தில் தொட்டு தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை "தங்கத்தாலேயே" ஐந்து நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.