கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2024-06-25 07:18 GMT

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதபோராட்டம் நேற்று தொடங்கியது. துறைமங்கலத்தில் உள்ள பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை பட் ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது.

Advertisement

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சமூகநீதியை சீர்குலைக்கும் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தக்கூடாது. வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், போக்குவரத்து துறையையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங் களை எழுப்பினர், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நிறைவடைகிறது

Tags:    

Similar News