புளியறையில் வாகன சோதனையில் ஆவணங்களும் இன்றி கொண்டுவந்த பணம் பறிமுதல் !
புளியறையில் வாகன சோதனையில் ஆவணங்களும் இன்றி கொண்டுவந்த ஒரு லட்சத்து 12,500 பிடிபட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-20 11:56 GMT
பணம் பறிமுதல்
தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் காவல்துறையினருடன் இணைந்து பறக்கும் படை குழுவினர் இன்று நடத்திய வாகன தணிக்கையின் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநிலம் புனலூர் பகுதியைச் சேர்ந்த அனுப் வர்க்கீஸ் என்பவர் வாகனத்தில் எந்த விதமான ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 12,500 பிடிபட்டது. இந்த பணத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.