கூரையிலிருந்து விழுந்தவர் பலி

திருவள்ளூர் மாவட்டம்,பாரிவாக்கத்தில் கூரையை சீரமைக்கும் பணியின் போது தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-07 16:54 GMT

தொழிலாளி பலி

பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 45. இவர் நேற்று, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையின் கூரையை சீரமைக்கும் பணியில், சக ஊழியருடன் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக கூரையில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News