வடமதுரை மக்களின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மக்களின் போராட்டம் வீண் போகவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ரயில்கள் நின்று சென்றன.
Update: 2024-03-18 08:37 GMT
திண்டுக்கல் விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5:12மணிக்கும், மறு மார்க்கத்தில் இரவு 9:20 மணிக்கும், செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11:42 மணிக்கும், மறு மார்க்கத்தில் மதியம் 3:27 மணிக்கும் வடமதுரை ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதே போல செங்கோட்டை ரயிலில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசிக்கு நேரடியாகவும், இதில் ஏறி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் இறங்கி அடுத்தாக வரும் ஈரோடு செங்கோட்டை ரயிலில் சாத்துார், மணியாச்சி, கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் போன்ற ஊர்களுக்கு செல்லலாம். இதற்கான டிக்கெட்டை வடமதுரை ரயில் நிலையத்திலேயே பெறலாம். இந்த ரயில்களை மக்கள் பயன்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.