வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன
பேச்சிப்பாறை உட்பட மலை கிராமங்களில் இருந்து தேர்தல் முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நள்ளிரவு எடுத்துச் செல்லப்பட்டன.
Update: 2024-04-20 04:47 GMT
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதி வான வாக்குகள் ஜூன் 4ம் தேதி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த வாக்கு சாவடிகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கோணத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கைமையத்துக்கு கொண்டு வரப்பட்டன. மலையோர பகுதிகளான பேச்சிப்பாறை குமரி கடலோர பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் நள்ளிரவு வரை கொண்டு வரப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 டி.எஸ்.பி.க்கள், 6 இன்ஸ் பெக்டர்கள் மற்றும் 100 போலீசார் வீதம், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.