மகனின் பிணத்துடன் இரவு முழுவதும் வசித்த பெண்

மகன் இறந்தது தெரியாமல் வசித்த மனநலம் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்

Update: 2023-12-22 05:07 GMT
மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலத்தை கைப்பற்றினர்

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி,  கேசவதிருப்பாபுரம் பகுதியில்  பாழடைந்த நூலக கட்டிடத்தில் ஆதரவற்ற 65 வயது மதிக்கத்தக்க பெண்ணும்  அவரது சுமார் 40 வயதுடைய  மகனும் வசித்து வந்தனர். இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து உணவு அளித்து வந்தனர்.      

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் மகன் இறந்துவிட்டார். இதனை அறியாமல் அந்த பிணத்துடன் அந்த தாயார் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் மகன் இறந்து விட்டதாக  தெரிவித்தனர். ஆனால் அந்த பெண் மகன் இறக்கவில்லை தூங்கிக் கொண்டிருக்கிறார் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.       

உடனே அந்த பகுதி மக்கள் வடசேரி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றவுடன் அந்தப் பெண் நூலகத்திற்கு சென்று கதவை பூட்டினார். மேலும் தங்களை தொந்தரவு செய்தால் தற்கொலை செய்வேன் எனமிரட்டியுள்ளார்.    

 இரவு ஆகிவிட்டதால் போலீசார் அங்கிருந்து கிளம்பினர். பின்னர் நேற்று காலையில் மகளிர் போலீசார் துணையுடன் போலீசார் மீண்டும் வந்து அந்தப் பெண்ணை  வலுக்கட்டாயமாக அகற்றி, பிணத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.      விசாரணையில் அந்த பெண் பெயர் புஷ்பம் என்பதும் பிணமாக கடந்தவர் மகன் பாஸ்கர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News