இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் பணி தொடங்கியது
Update: 2023-10-16 07:00 GMT
இஸ்ரேல் நாட்டில் இருந்து வரும் போர்ச் சூழ்நிலை காரணமாக அந்த நாட்டில் வேலை செய்து வரும், படித்து வரும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வரும் பணிக்காக ‘ஆபரேசன் அஜய்’ என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி சிறப்பு விமானங்கள் மூலம் இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு வருகின்றனர். இதுவரை நான்கு விமானங்கள் புதுடெல்லிக்கு சென்றுள்ளது. இதன் மூலம் சுமார் 800 க்கும் அதிகமானோர் தாயகம் திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களை இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லா வழியனுப்பி வைத்தார்.
இந்திய தூதரகம் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து இந்த பணிகளுக்காக இந்திய தூதரக ஊழியர்களுடன் தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.