பெட்ரோல் குண்டு தயாரித்த வாலிபர் கைது
திருமழிசை பேரூராட்சியில் பெட்ரோல் குண்டு தயாரித்த வாலிபர் கைது.
Update: 2024-04-15 16:02 GMT
திருமழிசை பேரூராட்சி குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் கட்டட பணி மேற்கொண்டு வந்தார். பாலமுருகனின் உறவினர் மகன் கோபி என்பவருக்கும், லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாலமுருகன் மகன் மனிஷாந்த் அவர்களை விலக்கி விட்டபோது லோகநாதன் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதையறிந்த லோகநாதனின் 16 வயது மகன் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் தன் நண்பரான ஸ்ரீகாந்த், 19 என்பவருடன் பீர்பாட்டிலில் பெட்ரோல் குண்டு தயார் செய்துமிரட்டல் விடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார் சிறுவன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை கைது செய்தனர். பின் சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஸ்ரீகாந்தை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.