ரேசன் அரிசி கடத்தல் - வாலிபர் கைது

திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபரை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-28 06:34 GMT
திண்டுக்கல்லில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே விஜய் நகர் பகுதியில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லோகநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 400 கிலோ, ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News