சோலார் பவர்பிளான்ட் நிறுவனத்தில் திருட்டு
எட்டயபுரம் சோலார் பவர் பிளான்ட் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ;
Update: 2024-04-05 04:45 GMT
வழக்கு பதிவு
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் உள்ள சோலார் பவர் பிளான்ட் நிறுவனத்தில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பேட்டரி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்நிறுவனத்தின் செக்யூரிட்டி மேனேஜர் குணசேகரன் (61) என்பவர் எட்டையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.