சின்னசேலம் அருகே சூளை உரிமையாளர் வீட்டில் திருட்டு
சின்னசேலம் அருகே சூளை உரிமையாளர் வீட்டில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அடுத்த பூண்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 60; வீட்டிற்கு அருகே செங்கல் சூளை வைத்துள்ளார். வெங்கடாசலம் தரைத்தளத்திலும், அவரது மகன் குமரேசன் முதல் தளத்திலும் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு மகன் சின்னதம்பி வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு வெங்கடாசலம் சென்றிருந்தார். காலை 10:00 மணியளவில் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்த நபர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வெங்கடாசலத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அவர், வந்து பார்த்த போது, வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. மேலும், முதல்தளத்தில் குமரேசன் வீட்டிலிருந்த 5 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தடயங்களை சேகரித்து விசாரித்தனர்.