இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சி

சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

Update: 2024-06-28 15:39 GMT

திருட்டு வீடியோ

சங்ககிரி அருகேயுள்ள சின்னகவுண்டனூர் பகுதியில் தர்மபுரி மாவட்டம் கோம்பேரியைச் பகுதியை சேர்ந்த அஜித் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றவர் காலையில் எழுந்து வந்து பார்க்கும் பொழுது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அடையாளம் தெரியாத மூவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.


இதனை அறிந்த அஜித் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News