அரசு மருத்துவமனையில் வயதான மூதாட்டியிடம் நூதன திருட்டு !
அரசு தலைமை மருத்துவமனையில் வயதான மூதாட்டியிடம் ஒரு பவுன் நகை 1000 ரூபாய் பணம் நூதன திருட்டு, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-09 06:22 GMT
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வயதான மூதாட்டியிடம் ஒரு பவுன் நகை 1000 ரூபாய் பணம் நூதன திருட்டு, போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்ட அரசு பொது தலைமை மருத்துவமனையில் கே புதூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் வயது 80, என்பவர் தனது மனைவி தங்கமாள் வாயது.70, என்பவருக்கு வயிற்று வலி காரணமாக கடந்த மார்ச் 5ஆம் தேதி அன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார் அவருக்கு எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனி ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருந்த வயதான தம்பதிகளிடம் சென்று, நானும் K.புதூர் வாதியார் மகன் என்று கூறி உங்களுக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் வாருங்கள் என அழைத்துள்ளார், ஏற்கனவே எக்ஸ்ரே எடுக்கப்பட்டது என தெரிவித்த தம்பதிகளிடம் மீண்டும் மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க சொல்லி இருக்கார் எனக்கூறி இருவரையும் எக்ஸ்ரே அறைக்கு அருகில் அழைத்துச் சென்று சிங்காரத்தை நோட்டு வாங்கி வாருங்கள் என்று வெளியே அனுப்பி வைத்துவிட்டு வயதான தங்கமாளிடம் எக்ஸ்ரே எடுக்கும் பொழுது நகைகள் அணிந்திருக்கக் கூடாது என கூறி அவர் காதில் இருந்த ஒரு பவுன் நகை கழட்டிக் கொண்டு, அவரை அங்கே அமர வைத்து விட்டு நோட்டு வாங்க சென்ற சிங்காரத்திடம் சென்று மருத்துவர் ஆவி பிடிக்கும் எந்திரம் வாங்கி வர சொல்லி இருக்கிறார் பணம் வேண்டும் என்று சொல்லி 650 ரூபாய் கேட்டுள்ளார் அதற்கு சிங்காரம் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார், பணத்தைப் பெற்றவர் அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனைக்கு வந்து கேட்டபோது, அவர் ஏமாற்றி திருடி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிங்காரம் மருத்துவமனை புற காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.