தம்மம்பட்டியில் அடுத்தடுத்து 8 கடைகளில் திருட்டு

தம்மம்பட்டியில் அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-11-05 04:35 GMT

போலீசார் விசாரணை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தம்மம்பட்டியில் திருச்சி மெயின் ரோட்டில் சார்பதி வாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளது. சார் பதிவாளர் அலுவலகம் அருகில் அழகுசுந்தரம் (45) என்பவருக்கு சொந்தமான இடத்தில் 8 கடைகள் உள்ளன. இந்த 8 கடைகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அக்கடைகளை ஜாகீர்உசேன், இளம்பழுதி, ராமு, தனலட் சுமி, பாஸ்கர், மணிகண்டன், சந்திரசேகர் ஆகியோர் வாடகைக்கு எடுத்து பத்திர எழுத்தர் அலுவலகம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் 8 கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிசென்றனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News