பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

கரூரில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை அடித்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு.செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2024-05-18 00:52 GMT

  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, கரூர் பாலிடெக்னிக் பஸ் ஸ்டாப்,சஞ்சய் நகர் 2வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் அசோக் குமார் மனைவி நர்மதா வயது 29. இவர் மே 6ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார். பின்னர் ஒன்பதாம் தேதி இரவு 10:30 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த தங்கத்தோடு, செயின், பிரேஸ்லெட், மோதிரம் மற்றும் வெள்ளியில் தயார் செய்த அரைஞான் கயிறு, கொலுசு, தோடு உள்ளிட்டவைகள் களவாடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இரண்டு தடயங்கள் கிடைக்கப்பெற்றதை பதிவு செய்துள்ளனர். மேலும், களவாடப்பட்ட பொருட்களில் தங்கம் 3- பவுன் 5 கிராம் எடை உள்ளது. வெள்ளி பொருட்கள் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புடையது. என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, களவாடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News