பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்!
அன்னவாசல் அருகே புதூரில் மயக்க மருந்து தெளித்து பெண்ணிடம் 5 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
Update: 2024-05-29 10:02 GMT
இலுப்பூர்: அன்னவாசல் அருகே உள்ள புதுாரை சேர்ந்தவர் காந்தி மனைவி ராஜேஸ்வரி(46). இவர் நேற்று தனியாக இருந்தபோது, வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் இருவர் உங்கள் வீட்டில் செய்வினை உள்ளது. அதை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதை நம்பி ராஜேஸ்வரி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மயக்க மருந்தை முகத்தில் தெளித்தனர். அவர் மயங்கியதும், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். இதுபற்றி அன்ன வாசல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.