கரூர் அருகே பைக்கில் வைத்திருந்த செல்போன் திருட்டு: இருவர் கைது

கரூர் அருகே பைக்கில் வைத்திருந்த செல்போனை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-05-09 09:50 GMT
செல்போன் திருட்டு

 ரூர் மாவட்டம், வெள்ளியணை, செல்லாண்டிபட்டி அருகே உள்ள குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கட்ராஜ் வயது 49. இவர் மார்ச் 18 ஆம் தேதி இரவு 8:45- மணி அளவில், வெங்கக்கல்பட்டி ரவுண்டானா அருகே தனது டூவீலரில் வந்த வெங்கட்ராஜ்,

இயற்கை அழைத்ததால், தனது செல்போனை தனது டூவீலரின் டேங்க் கவரில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த,கரூர் மாவட்டம், மண்மங்கலம், முத்தமிழ்புரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது 23 மற்றும் கரூர், ரத்தினம் சாலையில் உள்ள கே எம் சி காலனியை சேர்ந்த பீமா என்கிற சாரதி,

Advertisement

ஆகிய இருவரும் வெங்கட்ராஜ் வைத்துச் சென்ற செல்போனை களவாடி சென்றுள்ளனர். இயற்கை அழைப்பை முடித்துவிட்டு, மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வரும்போது, தனது செல்போன் மாயமானது கண்டு திடுக்கிட்டார். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்த போது, செல்போன் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், தனது செல்போன் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்,இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, மேற்கண்ட இருவரும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே இருவரையும் கைது செய்து, அவர்கள் களவாடிய அந்த செல்போன் மதிப்பு ரூபாய் 12,000- என மதிப்பீடு செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரையும் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags:    

Similar News