கோர்ட்டு ஊழியரின் இருசக்கர வாகனம் திருட்டு
சங்ககிரியில் கோர்ட்டு ஊழியரின் இருசக்கர வாகனம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-22 05:42 GMT
கோர்ட்டு ஊழியரின் இருசக்கர வாகனம் திருட்டு
சேலம் மாவட்டம் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதி மன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மைதிலி (வயது37). இவர் நேற்று முன்தினம் சங்ககிரி குற்றவியல் நீதிபதி குடியிருப்பு அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மீண்டும் வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.