ஊர்க்காவல் படை காவலர் வீட்டில் நகை திருட்டு
பாலக்கோடு அருகே ஊர்க்காவல் படை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.;
Update: 2024-04-22 02:20 GMT
காவல் நிலையம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே உள்ள ஏ.முருக்கம்பட்டியை சேர்ந்த தமிழரசன் 30. இவர் ஊர் காவல் படையில் பணிபுரிந்து வருகிறார் கடந்த 18 அன்று லோக்சபா தேர்தல் பணிக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து 19ஆம் தேதி அன்று வீட்டின் கதவு திறந்த நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்ததற்கு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவுகள் திறக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்து 13 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தமிழரசன் அளித்த புகார் படி கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.