அரசு ஊழியர் வீட்டில் ரூ.1.25 லட்சம் திருட்டு : 2பேர் கைது!

ஆழ்வார் திருநகரி டவுன் பஞ்சாயத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1லட்சத்து 20ஆயிரம் பணத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

Update: 2024-01-31 08:51 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி வாய்க்கால்கரை பகுதியைச் சேர்ந்தவர்  மூக்காண்டி மகன் முனியாண்டி (52). இவர் ஆழ்வார்திருநகரி டவுண் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் வீட்டை பூட்டிவிட்டு வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

  இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 20ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது. இது தொடர்பாக அவர் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில புகார் செய்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த  கண்ணன் மகன் இசக்கிமுத்து (24), கணேசன் மகன் வேலு (30) ஆகிய 2பேரும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News