சேலம் அருகே பா.ஜனதா நிர்வாகி வீட்டில் ரூ.90 லட்சம் திருட்டு?

சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜனதா செயலாளராக உள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனிடம் நேற்று ஒரு புகார் மனுவை அளித்தார்.

Update: 2024-07-12 05:59 GMT

திருட்டு

சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜனதா செயலாளராக உள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனிடம் நேற்று ஒரு புகார் மனுவை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். மேலும் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறேன்.

எனது பூர்வீக சொத்தான நிலத்தை விற்று குடும்ப கடன் அடைக்கவும், மகன்களின் படிப்பு மற்றும் மனைவியின் மருத்துவ செலவுக்காகவும் ரூ.90 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தேன். மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை பெறுவதற்காக பணம் வைத்திருந்த பையை பார்த்தபோது ரூ.90 லட்சத்தை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாதபோது அந்த பணத்தை யாரோ திருடிவிட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிலர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே ரூ.90 லட்சத்தை திருடிய நபர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News