சின்னமனூர் அருகே கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு

சின்னமனூர் அருகே கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-16 13:43 GMT

சின்னமனூர் அருகே கோவிலில் சுவாமி சிலைகள் திருட்டு

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலையில் செல்லாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு பொன்னையா என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் பூஜை செய்ய கோவிலுக்கு வந்த போது கோவிலின் வெளியே இருந்த ரூபாய் 70 ஆயிரம் மதிப்புள்ள கருப்பசாமி விநாயகர் சிலைகள் காணவில்லை. இது குறித்து சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News