மனித நேய காப்பகம் சார்பில் உலக சாதனை நிகழ்வு

தேனியில் மனித நேய காப்பகம் சார்பில் ஆல் இண்டியா புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை யோகாசன நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-03-18 04:47 GMT

தேனியில் மனித நேய காப்பகம் சார்பில் ஆல் இண்டியா புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது . இந்த நிகழ்வில் 1 மணி நேரத்தில் 35 காப்பக குழந்தைகள் 33 யோகாசனத்தை 30 முறை செய்யும் நிகழ்வும் , 2 குழந்தைகள் பானை, தாம்பழத்தட்டு , கிளாஸ் , டீபாய் , டேபிளின் மேல் நின்று 5 நிமிட யோக சனம் நிகழ்வும் , 3 மணி நேரத்தில் 40 குழந்தைகளுடன், 2500 யோக ஒரே நேரத்தில் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த உலக கின்னஸ் சாதனைநிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பத்மா ராமசாமி பள்ளியின் நிர்வாகிகள் பத்மா பள்ளி முதல்வர் திருப்பா அவர்களின் துணைவியார் நீதிபதி சத்திய தாரா மற்றும் தேனி மாவட்ட வழக்கறிஞர் தென் மண்டல செயலாளர் எம் கே முத்துராமலிங்கம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்பள்ளிகளின் உறவின் முறை தலைவர் ராஜ்மோகன்மற்றும் வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம் வையத் தமிழ்ச் சங்கம் கவிஞர் இளங்குமரன் பசுமை தேனி நிறுவனர் முன்னாள் ராணுவத்தினர் சர்ச்சில் துறை மற்றும் விஜய் எலக்ட்ரிக் நிர்வாகி ராஜேஷ் கண்ணன் இவர்களுடன் மனிதநேய காப்பாளர் பால்பாண்டி ஆகியோர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை சிறப்பித்தனர்

மேலும் எம் கே எம் முத்துராமலிங்கம் உரையாற்றும்போது தேனி மாவட்டம் சிறந்த மாவட்டம் தேனி மாவட்டத்தில் இருந்தால் மிகச் சிறந்த படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர் அதேபோல் இந்த கின்னஸ் சாதனைக்காக யோகாசனத்தில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்

Tags:    

Similar News