காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவு
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி மாத தெப்பத் திருவிழா நிறைவு பெற்றது.
Update: 2024-03-24 12:43 GMT
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பங்குனி மாத தெப்பத் திருவிழா நிறைவு பெற்றது. இக்கோயிலில் நிகழ் ஆண்டுக்கான தெப்பத் திருவிழா கடந்த 21 -ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாளையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் 7 சுற்றுகள் வலம் வந்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். மேகலாயா தலைமை நீதிபதி தரிசனம்: மேகலயா மாநிலத்தின் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சனிக்கிழமை வந்து மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். ஸ்ரீமடத்தில் மகா பெரியவா் அதிஷ்டானத்திலும், காமாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தாா். காஞ்சி சங்கராசாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், பாஜக மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு, பாஜக பிரமுகா் காஞ்சி.வி.ஜீவானந்தம் ஆகியோரும் சந்தித்து ஆசி பெற்றனா்.