சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்

களக்காடு சத்தியவாகீஸ்வரர்- கோமதியம்மன் திருக்கோயிலில் நடந்த தெப்போற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-11 00:46 GMT

தெப்போற்சவம் 

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் திருக்கோயிலில் தெப்போற்சவம் நேற்று இரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி சத்தியவாகீஸ்வரர்- கோமதியம்மன் தெப்பத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News