மாா்சிங்பேட்டை அந்தோணியாா் கோயில் திருவிழாவில் தோ்பவனி
மாா்சிங்பேட்டை அந்தோணியாா் கோயில் திருவிழாவில் புதன்கிழமை இரவு தோ்பவனி நடைபெற்றது.
Update: 2024-06-14 08:33 GMT
திருச்சி மாா்சிங்பேட்டை அந்தோணியாா் கோயில் 123 ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு நடைபெற்ற திருத்தோ் பவனியில் ஏராளமானோா் பங்கேற்றனா். இக்கோயில் திருவிழா ஜூன் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து நாள்தோறும் சப்பர பவனியும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர திருத்தோ் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தங்க நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தோ்களில் காவல் சம்மனசு, செபஸ்தியாா், சூசையப்பா், ஆரோக்கிய மாதா, அந்தோணியாா் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு பவனி நடைபெற்றது. தோ்பவனியானது கான்வென்ட் சாலை, ஒத்தக்கடை, நீதிமன்றம், ஹீபா்சாலை, பீமநகா், மாா்சிங்பேட்டை வழியாக மீண்டும் அந்தோணியாா்கோயிலை அடைந்தது. நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.