குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் இல்லாததால் காற்று வாங்கும் பழக்கடைகள்

ரெட் அலர்ட் காரணமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் குற்றாலத்திலுள்ள பழக்கடைகளில் விற்பனை எதுவுமின்றி வெறிச்சோடியது.;

Update: 2024-05-21 02:02 GMT
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் இல்லாததால் காற்று வாங்கும் பழக்கடைகள்

ரெட் அலர்ட் காரணமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் குற்றாலத்திலுள்ள பழக்கடைகளில் விற்பனை எதுவுமின்றி வெறிச்சோடியது.  

  • whatsapp icon
தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளும் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மூடப்பட்டது. இதனால் அருவிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது. இதனால் குற்றாலத்தில் அங்கே பழக்கடை, ஜூஸ் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மிகுந்த கவலைக்குள்ளாகின்றனர். இன்று காலை மெயின் அருவியில் உள்ள ஒரு பழக்கடையில் ஆளே இல்லாமல் காற்று வாங்கியது. இதனால் பழக்கடைகளில் வியாபாரம் இல்லாததால் வியாபாரியில் கவலை தெரிவித்தனர்.
Tags:    

Similar News