குழாயின் உடைப்பு சீரமைக்க கோரிக்கை !

மாமல்லன் நகர் பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. அதனை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-16 11:11 GMT

குழாய்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளுக்கும் பாலாறு, வேகவதி, திருப்பாற்கடல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லன் நகர் பிரதான சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. இதனால், குடிநீர் வீணாவதோடு, அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News