காங்கேயம் அருகே இரவு முழுவதும் வீடுகள் மீது மர்மமான முறையில் கற்கள் விழுந்தால் பரபரப்பு - அதிகாரிகள் ஆய்வு 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் அருகே ஒட்டபாளையத்தில் இரவு முழுவதும் வீடுகள் மீது மர்மமான முறையில் கற்கள் விழுவதால் அந்த பகுதி பொதுமக்கள் தூக்கமில்லாமல் சிரமப்படுவதாகவும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு.

Update: 2024-07-09 06:50 GMT

காங்கேயம் கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் மீது கடந்த 12 நாட்களாக மர்மமான முறையில் கற்கள் விழுவதாகும் குறிப்பாக இரவு 6மணி முதல் அதிகாலை 2 மணி வரை தொடர்ச்சியாக கற்கள் விழுதாகும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பயந்து போன பொது மக்கள் அப்பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மர்மமான முறையில் விழும் கற்கள் எங்கிருந்து  வருகிறது? யார் இது போன்ற வேலைகள் செய்கின்றனர் என்ற சந்தேகத்தில் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகார் அடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும் ஆனால் தற்போது வரை எந்த ஒரு மர்மமான நிகழ்வும் நடந்ததில்லை கடந்த 12 நாட்களாக மாலை 6மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மர்மமான முறையில் எங்களது வீட்டின் மீது மிகப்பெரிய பெரிய சுண்ணாம்பு கற்களும், வெங்க கற்களும் வந்து விழுகின்றது.

இந்த கற்கள் எங்கிருந்து வருகிறது? யார் வீசுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. முதலில் குடிபோதையில் யாரோ சிலர் எங்களது வீட்டின் மீது கற்களை வீசுவதாக நினைத்து அக்கம் பக்கத்தில் தேடினோம். ஆனால் ஒரு நாளைக்கு சுமார் 7 மணி நேரம் தொடர்ச்சியாக யார் கண்ணிலும் படாமல் கற்களை வீசுவது என்பது சாத்தியமில்லை.

எனவே எங்கள் பகுதியில் உள்ள பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து இந்த செயலில் ஈடுபது யார் என்பதை கண்டறிய இரவு நேரங்களில் கண்காணித்து வந்தோம். ஆனால் இன்று வரை இந்த செயலில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் விளையாட்டாக பேசப்பட்ட இந்த விஷயம் நாளடைவில் எங்களை மிகவும் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறு இரவு நேரங்களில் மர்மமான முறையில் விழும் கற்களை ஒருவேளை குட்டிச்சாத்தான் போன்ற அமானுஷ்ய சக்திகாளல் நடைபெறுகிறதா என்பதை போன்ற சந்தேகம் எங்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த செயல்களால் எங்கள் ஊரில் உள்ள பெண்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

முக்கியமாக குழந்தைகள் பயந்து வீதியில் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் குழந்தைகள் குட்டிச்சாத்தான் மற்றும்  பேய் வந்துவிடுமா என திடீரென ஆள தொடங்கி விடுகின்றனர். எனவே இதற்கான உண்மையான பின்னணி என்னவென்று தெரியாமல் நாங்கள் மிகவும் குழம்பி போய் உள்ளோம். மேலும் எங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சமாதானம் செய்ய முடியவில்லை.

எனவே நாங்கள் அனைவரும் ஒன்று கூடி எங்கள் பகுதியில் உள்ள கோயில் தஞ்சம் அடைந்துள்ளோம்.காங்கேயம் காவல் துறையில்  புகார் அளித்த அடிப்படையில் கடந்த 12 நாட்களாக சம்பா இடம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயல்கள் குட்டிசாத்தான்களின் வேலையா?இது அரசியல் சார்ந்த பிரச்சனையா? அல்லது யாரோ மாந்திரீகம் செய்கிறார்களா? அல்லது திருடர்களின் வேலையா? அல்லது குடிகாரர்களின் செயல்களா ?என்பது போன்ற பல கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு 9 மணி அளவில் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி,காவல் ஆய்வாளர் விவேகானந்தன், மண்டலா துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி , வருவாய் ஆய்வாளர் விதிர் வேந்தன் ஆகியோர்கள் சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து பார்வையிட்டுச் சென்றனர்.

மேலும் ரோந்து கேமராக்கள், கிரேன் வாகனத்தில் 60 அடி உயரத்தில் ஆட்களை அமர்த்தி சுற்றுவட்டார பகுதிகளை கண்காணித்தல், அதிக ஒளி கொண்ட விளக்குகளை வீதியில் பொருத்தியும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைத்தும் கண்காணித்து வருகின்றனர். படியூர் ஊராட்சி மற்றும் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், இரவு நேரங்களில் நேரில் சென்று மக்களுக்கு உறுதுணையாக இருந்துவருகின்றன.

Tags:    

Similar News