இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2024-05-14 15:17 GMT
பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஜீவா செட் என்ற பகுதியில் , உள்ளூர் பகுதியை சேர்ந்த இருவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் அரசு மதுக்கடையிலேயே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. இதனை அடுத்து மதுக்கடையில் இருந்து வெளியே வந்தவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜீவா செட் என்ற பகுதி அருகே வாக்குவாதம் முற்றி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது . இதனை அடுத்து இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பு ஆட்களை அதிகளவு சேர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து அங்கு இருந்தவர்கள் பள்ளிபாளையம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிபாளையம் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..