அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து எறிந்ததால் பரபரப்பு !

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update: 2024-07-12 06:09 GMT
அண்ணாமலையின் உருவப்படத்தை கிழித்து எறிந்ததால் பரபரப்பு !

காங்கிரஸ் கட்சி

  • whatsapp icon

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசிய அண்ணாமலையை கண்டிக்கிறோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அண்ணாமலை உருவப்படத்தை கிழித்து எறிந்தனர்.

அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மாநகர வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணியம், பொருளாளர் தாரை ராஜகணபதி, துணைத்தலைவர் திருமுருகன், மாநகர பொதுச்செயலாளர் குமரேசன், கவுன்சிலர் கிரிஜா, மண்டல குழு தலைவர் நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News