மூன்றாவது நாளாக தொடருது... வருமான வரித்துறை சோதனை
காஞ்சிகோவிலில் கட்டுமான நிறுவன உரிமையாளரின் வீடு உட்பட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து, மூன்றாவது நாளாக சோதனை நடந்தது.;
Update: 2024-01-04 08:06 GMT
காஞ்சிகோவிலில் கட்டுமான நிறுவன உரிமையாளரின் வீடு உட்பட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து, மூன்றாவது நாளாக சோதனை நடந்தது.
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி.CMK கட்டுமான நிறுவன உரிமையாளரான இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் அமைத்து மூலம் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈரோட்டில் 3 வது நாளாக 4 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதே CMK கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலக சத்தி சாலையிலுள்ள அலுவலகம் , கருப்பண்ண வீதியிலுள்ள CMK நிறுவனம் , காஞ்சிக்கோயிலுள்ள CMK உரிமையாளரான குழந்தைசாமியின் வீடு என 3 இடங்களிலும் 20 க்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் ஈரோடு பெரியார் நகரில் உள்ள பிவி இன்ப்ரா பிராஜெக்ட் நிறுவனத்திலும் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்