நெல்லையப்பர் கோவிலில் மூன்றாம் நாள் நிகழ்ச்சி !

நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2024-06-15 07:29 GMT

திருவிழா 

நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்று (ஜூன் 15) 3ஆம் நாள் விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் சுவாமி வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News