எடப்பாடி ஸ்ரீ ஞானகந்தசாமிக்கு திருக்கல்யாண,யாகபூஜை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்லப்பாளையம் ஸ்ரீஞானகந்தசாமிக்கு திருக்கல்யாண, யாகபூஜை சிறப்பாக நடைப்பெற்றது.

Update: 2024-03-25 06:25 GMT

ஞானகந்தசாமி

தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் திருநாள் இந்த ஆண்டு முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்கிழமை வருவது சிறப்பு வாய்ந்தது. அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம் கல்லபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞானகந்தசாமி திருக்கோயிலில் நேற்று இரவு யாக பூஜைகள் நடைபெற்ற பின்னர் வள்ளி தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய கயிறு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை வள்ளி தெய்வானை முருகனை தேரில் வைத்து அரகர அரகரா என கோஷம்த்துடன் பக்தர்கள் தேரை இழுத்தபடி திருக்கோயிலை சுற்றி வந்து ஸ்ரீ ஞான கந்தசாமிக்கு நெய்வேத்தியம் ஏற்றி தீபாராதனை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.
Tags:    

Similar News