திருக்கடையூர் ஆலய திருக்கல்யாண நிகழ்ச்சி - தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-17 03:36 GMT

திருக்கல்யாண உற்சவம் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பக்தர் மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு சித்திரை திருவிழா  கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான  அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்று பெண்கள் சீர்வரிசை எடுத்துவந்து ஊஞ்சல் உற்சவம் மற்றும் காப்பு கட்டி  திருக்கல்யாண உற்சவத்தில் மாங்கல்ய தாரணம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது . இதில் தருமபுர ஆதீன மடாதிபதி  உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News