திருக்கோவிலூர் : உலகளந்த பெருமாள் கோவிலில் அவதார திருவிழா
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்த ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் அவதார திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-12 05:25 GMT
உலகளந்த பெருமாள் கோவில்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை புணர்வசுவை முன்னிட்டு ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனின் அவதார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கோலாகலன் என்ற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.