திருக்கோவிலூர் விவேகானந்தா பள்ளி சாதனை

திருக்கோவிலூர் விவேகானந்தா பள்ளி. 12ம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2024-05-21 03:49 GMT

திருக்கோவிலூர் விவேகானந்தா பள்ளி. 12ம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மணம்பூண்டியில் கல்விப் பணியில் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் தரம் மிகுந்த பள்ளியாக விவேகானந்தா வித்யாலயா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பள்ளி தாளாளர் முருகன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இப்பள்ளி விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளியாக கடந்த 1995ம் ஆண்டு துவங்கப்பட்டது. பெற்றோர்களின் தொடர் ஆதரவால், இன்று மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக வளர்ந்துள்ளது. மாணவர்களுக்கு எந்த அளவிற்கு கல்வி முக்கியமோ, அதே அளவிற்கு ஒழுக்கமும், தன்னம்பிக்கையும் அவசியம். இத்து டன் உயர் கல்விக்கான ஆலோசனைகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வில் பங்கேற்கும் அளவிற்கு மாணவ பருவத்திலேயே பொது அறிவை வழங்கி தயார்படுத்தி வருகிறோம். நீட், ஜெ.இ.இ., தேர்வுகளுக்கு தினசரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவி நிதர்ஷா 582, நிஷா 580, தமிழ்ச்செல்வன் 578 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் ஹேமலதா 494, மோனிஷா , ஜெயப்பிரகாஷ், தரணிபிரியா தலா 493, ஜோஷிதா, சிவசங்கரி ஜோயல் தலா 490 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

Tags:    

Similar News