திருப்பூரில் வருகின்ற ஜூன் மாதம் நிட்ஜோன் டிரேட் எக்ஸ்போ துவக்கம்!
திருப்பூரில் வருகின்ற ஜூன் நிட்ஜோன் டிரேட் எக்ஸ்போ துவங்கப்படவுள்ளது.
திருப்பூர் வேலன் ஓட்டல் வளாகத்தில் வருகிற ஜூன் மாதம் 14 மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் முதல் முறையாக நிட் ஜோன் டிரேட் எக்ஸ்போ நடைபெறுகிறது.
இது குறித்து நிட் ஜோன் டிரேட் ஒருங்கிணைப்பாளர் பரத் கூறியதாவது, "ஏற்றுமதிக்கு தேவையான எந்திரங்கள், தளவாட பொருட்கள், நூல், ரசாயன பொருட்கள், துணிகள் என அனைத்தும் இங்கு காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
இதில் பல நாடுகளை சேர்ந்த 4 ஆயிரம் வர்த்தகர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் 3 நாட்கள் கலந்துகொள்வார்கள். ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். புதுப்புது கண்டுபிடிப்புகள் இடம்பெற இருக்கின்றன. 3 நாட்களில் ரூ.500 கோடி வர்த்தக விசாரணை நடைபெற வாய்ப்பு உள்ளது. பிரிண்டிங்கில் டிஜிட்டல் பிரிண்டிங்கள் என ஏராளமான புதிய எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது" என்றார்.