திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 15:19 GMT
தமிழக அரசு சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் ஆண்டுக்கு 2 முறை கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஜூன் 10ம் தேதி முதல் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களில் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.