திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

Update: 2024-03-11 17:23 GMT

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த தேரோட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் மரியாதையை ஏற்றுக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தன். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி அரோகரா என்ற கரகோசத்துடன் எழுப்பி பக்தி பரவசத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

மேலும் இந்த தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது புதுக்கோட்டை‌ திருவப்பூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் உள்ள முத்துமாரியம்மன் மாரியம்மன் மாரியம்மன் எல்லாம் முதன்மை மாரியம்மன் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து தினசரி அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திருவிழா காட்டுமாரியம்மன் கோயில் தேர்முட்டி வீதியில் இன்று விமர்சையாக நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் ஆகியோர் மரியாதையை ஏற்று தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். மேலும் இதில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் மா, பலா, வாழை, என முக்கனிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க குதிரை ஆட்டம் வானவேடிக்கை மற்றும் மங்கல இசை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மேலும் தேரானது பக்தர்களின் அரோகரா மற்றும் ஓம் சக்தி பராசக்தி என்ற கரகோஷத்துடன் நான்கு வீதிகளையும் வலம் வந்து இறுதியாக தேர் நிலை நிற்கும். இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மின் வாரியத்தினர் மின்சாரத்தை துண்டித்து தேருக்கு இடையூறாக இருந்த ஒயர்களை அப்புறப்படுத்தி தேர் சென்ற பின்னர் மீண்டும் சரி செய்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகர பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்திருவிழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று நடைற்ற தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News