சிவன் கோவிலில் திருவாசக முற்றோதல் விழா
சிவன் கோவிலில் திருவாசக முற்றோதல் விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 09:56 GMT
விழாவில் கலந்து கொண்டவர்கள்
திருப்புத்துார் ஒன்றியம், கண்டவராயன்பட்டி நகர சிவன் கோயிலில் நுாறாவது திருவாசக முற்றோதல் திருவிழா நடைபெற்றது. காலையில் விநாயகர், முருகன் சுவாமி அம்பாள் மற்றும் நால்வருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னர் 108 சிவலிங்கம் வைத்து தீபம் ஏற்றி சுவாமி, அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளி முற்றோதல் துவங்கியது.
பின்னர் ஒருங்கிணைப்பாளர் தியாகராசன் தலைமையில் நிதி உதவியவர்கள், முற்றோதலில் பங்கேற்றவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இரவு அதனைத் தொடர்ந்து விநாயகர், பிரதோஷ சுவாமி, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது