திருவேற்காடு : பக்தர்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2024-05-29 07:07 GMT

பாலித்தீன் பைகளை பெற்றுக்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு, செவ்வாய்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். அவர்கள், பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்காக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்க, திருவேற்காடு நகராட்சி பிரதான சாலைகளின் குறிப்பிட்ட இடங்களில், பெண் துாய்மை பணியாளர்களை நிறுத்தி, தெரு மற்றும் மழை நீர் வடிகால்களில் குப்பை வீசுவோரைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அப்படி வீசுவோரிடம், விழிப்புணர்வு எச்சரிக்கைக்காக, 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று, தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், விழிப்புணர்வு சேவையாக பிளாஸ்டிக் பைகளை, கோவில் வாசலில் காத்திருக்கும் துாய்மை பணியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர். பக்தர்கள் பிளாஸ்டிக்கை யன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றனர்.

Tags:    

Similar News