திருவிளக்கு பூஜை

குமாரபாளையத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் 59ம் ஆண்டு அறுபடை யாத்திரையையொட்டி,  திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2024-01-08 10:21 GMT

குமாரபாளையத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் 59ம் ஆண்டு அறுபடை யாத்திரையையொட்டி,  திருவிளக்கு பூஜை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் அறுபடை யாத்திரை செல்வது வழக்கம். முன்னதாக தீர்த்தக்குட ஊர்வலம், சுவாமிக்கு சிறப்பு அபிசேக, அலங்கார வழிபாடுகள், யாக சாலை பூஜைகள், அன்னதானம்  நடப்பது வழக்கம். 59ம் ஆண்டு அறுபடைவீடு  யாத்திரையையொட்டி, காவிரி ஆற்றில் மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டது.

சக்தி விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆதித்யாதி ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம் உள்ளிட்ட  யாக வழிபாடு கோவில் வளாகத்தில் நடந்தது. நேற்று  திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.  இன்று சிறப்பு பஜனை மற்றும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறவுள்ளது. ஜன. 9ல் முருக பக்தர்கள் அறுபடை வீடு புனித யாத்திரை புறப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஆறுமுகம், குருசாமி லோகநாதன், செயலர் பழனிசாமி உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News