இந்த தேர்தல் பிரதமருக்கான தேர்தல் அல்ல- தேனி திமுக வேட்பாளர் பேட்டி....
இந்த தேர்தல் எம்.பி.க்கான தேர்தல். பிரதமருக்கான தேர்தல் அல்ல, பிரதமர் வேட்பாளர் யார் என்று இந்தியா கூட்டணியில் 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று நல்ல பிரதமரை தேர்ந்தெடுப்போம் என - உசிலம்பட்டியில் தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி
இந்த தேர்தல் எம்.பி.க்கான தேர்தல். பிரதமருக்கான தேர்தல் அல்ல, பிரதமர் வேட்பாளர் யார் என்று இந்தியா கூட்டணியில் 400 எம்.பி.,க்களுக்கு மேல் வெற்றி பெற்று நல்ல பிரதமரை தேர்ந்தெடுப்போம் என - உசிலம்பட்டியில் தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி - மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்காமநல்லூர், சேடபட்டி, சின்னகட்டளை, செட்டியபட்டி, அதிகாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இந்தியா கூட்டணியின் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்., அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச் செல்வன். இன்று தேனி பரப்புரையின் போது திமுக அதிமுக ரகசிய கூட்டணி வைத்து டிடிவியை தேற்கடிக்க பார்க்கிறது என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு - அண்ணாமலைக்கும் தினகரனுக்கும் நான் கேட்கும் கேள்வி. சசிக்கலாவை பெங்களூர் சிறைக்கும், தினகரனை திகார் சிறைக்கும் அனுப்பியது மோடி, பிஜேபி அரசு., அப்போதெல்லாம் வாய் கிழிய பேசிய தினகரன், பிஜேபி ஒரு போதும் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது, மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடியாதுனு சொன்ன தினகரன் எந்த மூகத்தை வைத்து அதே பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வந்துள்ளார். நீங்கள் நாடகம் ஆடுகிறீர்களா, நாங்கள் நாடகம் ஆடுகிறோமா., நாங்கள் திமுக இந்தியா கூட்டணி அமைத்து வழுவா பாஜகவை எதிர்கிறோம், இனிமேல் பிஜேபி வெற்றி பெற கூடாது, வெற்றி பெற்றால் இந்தியா இந்தியாவாக இருக்ககாது துண்டாடப்படும் என்ற எண்ணத்தில் சிறப்பான கூட்டணி அமைத்து பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும், சசிக்கலாவையும், தினகரனையும் ஏன் பாஜக அரசு சிறைக்கு அனுப்புனீங்க என்ற நான் கேட்ட கேள்விக்கு தினகரனும், அண்ணாமலையும் பதில் சொல்ல வேண்டும். இனிமேல் தினகரன் பெரிய அளவு வளர்கிறார் என்பதை விட அதிமுகவில் இருந்த போது ஏன் 28 ஆயிரம் வாக்குகளில் தோல்வியடைந்த தினகரன் எந்த அடிப்படையில் வெற்றி பெற முடியும். போட்டியே திமுக அதிமுகவிற்கு தான், இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என கேட்ட அண்ணாமலைக்கு., இந்த தேர்தல் எம்.பி.க்கான தேர்தல் பிரதமருக்கான தேர்தல் அல்ல., மக்கள் பிரதமருக்கு ஓட்டு போட முடியாது, எம்.பி.க்கள் தான் ஓட்டுப் போட முடியும்,மெஜாரிட்டி எந்த அணியில் இருக்கோ, அவர்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும். இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்., நல்ல பிரதமரை நாங்கள் தேர்ந்தெடுப்போம் என பதில் அளித்தார். மேலும் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அண்ணாமலையின் பாஜக அரசு மோடி பிரதமராக இருந்தார்ல, முல்லை பெரியாறில் பேபி அணையை கட்டவிடவில்லை., கர்நாடகாவில் மேததாகு அணையை கட்ட உதவி செய்தீர்கள்., எல்லா இடைஞ்சலையும் கொடுத்துவிட்டு இப்போது கடைசியாக கட்சத்தீவு ஆட்சியில் 10 ஆண்டுகளாக இருக்கும் போது இதையெல்லாம் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவில்லையே பிஜேபிக்கு இப்போது தோற்கும் தருவாயில் நின்று கொண்டு அதை செய்கிறேன் இதைச் செய்கிறேன் என சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள் இவ்வளவு கீழே இறங்கி பேசுவதற்கு காரணமே இந்த முறை பிஜேபி ஜெயிக்க முடியாது என்பது மோடிக்கு தெரியும் அதனால் தான் எவ்வளவோ வழிய வழிய தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்து பார்க்கின்றனர் அந்த பிரச்சாரம் எடுபடாது இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என பேட்டியளித்தார். பேட்டி : தங்கதமிழ்ச்செல்வன் ( தேனி தொகுதி திமுக வேட்பாளர் )