தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் புகுந்த ஆமையால் அதிர்ச்சி
டூவிலர் ஒர்க்ஷாப் அருகே வந்த ஆமையை வனத்துறையினர் பிடித்துச் சென்றனர். ;
Update: 2024-02-22 14:02 GMT
ஆமையை மீட்ட வனத்துறையினர்
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த ஆமையை வனத்துறை பிடித்து பாதுகாத்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 2வது தெருவில் நேற்றுஇரவு 9 மணி அளவில் மகாலட்சுமி டூவீலர் ஒர்க்ஷாப் அருகே அரிய வகை ஆமை ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து ஒர்க்ஷாப் உரிமையாளர் முத்து என்பவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பாலசுப்பிரமணியம், மகேஷ் ஆகியோரின் நடவடிக்கையின் பேரில், வனத்துறை பாதுகாவலர் செல்வராஜ் பிடித்துச் சென்றார்.