பாலியல் வழக்கில் கைது செய்யபட்டவர்கள் நீதிமன்றத்தில் சரண்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-23 10:11 GMT
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.நீண்ட மாதங்களுக்கு பிறகு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்படுகின்றனர். இதுவரை சேலம் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில் இன்று பாலியல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள வீடியோக்களை வழக்கறிஞர் முன்னிலையில் ஒளிபரப்பு செய்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் பின்னர் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாகதிருநாவுக்கரசு,சதீஷ்,வசந்தகுமார், சபரி ராஜன்,மணிவண்ணன்,பாபு, அருளானந்தம்,அருண்குமார்,ஹெரன்பால் உள்ளிட்ட ஒன்பது பேரைக் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர்.கடந்த 2019 ஆம் ஆண்டு குற்றப் பத்திரிக்கை தயார் செய்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.வழக்கை விரைந்து விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கடந்த 2021 ஆம் ஆண்டு 9 பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை,கூட்டுச்சதி,மானபங்கம் செய்தல்,பெண்கள் கடத்தல்,ஆபாச வீடியோ பரப்புதல்,தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துங்கள் உள்ளிட்ட 10 சட்டப் பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.